
"அன்பு என்பது நீங்கள் கூடுதல் தூரம் செல்ல நீங்கள் செய்யும் தியாகமாகும்... ஒருவரை மகிழ்விக்க... ஒருவரின் வாழ்க்கையை ஆன்மீக ரீதியில் உயர்த்த..."
அன்பும் ஆதரவும் வாழ்வின் அடிப்படைக் தேவைகளாகும். இது எங்கள் நிறுவன தத்துவத்தின் அடிப்படைக் கொள்கையாகும். இது எங்கள் ஐந்து மானுட விழுமியங்களில் ஒன்றாகவும் காணப்படுகின்றது. அன்பும் ஆதரவும் நாங்கள் பணிபுரியும் முறையை உள்ளடக்குவதோடு, வாடிக்கையாளர்களுடனான எங்கள் உறவுவையும் கட்டியெழுப்புகின்றது.
"ஒவ்வொரு உறவுக்கும் நம்பிக்கையே முக்கியம். நம்பிக்கை என்பது ஆரம்பத்தில் உறவுகள் எவ்வாறு தொடங்குகின்றனவோ அதே போல் அதன் வளர்ச்சியிலும் அந் நம்பிக்கை இருக்கும் போது தான் உறவுகள் வளர்கின்றன."
நம்பிக்கை என்பதே எந்த ஒரு உறவு முறைக்கும் திறவுகோல் என்பதை நம் நம்புகின்றோம். இது உறவு முறைகள் எவ்வாறு தொடங்குகின்றது, வளர்கின்றது என்பதை உறுதி செய்வதோடு உடனடியாக ஆக்கபூர்வத்தன்மையை உருவாக்குகின்றது.
நேர்மை எனப்படுவது யாதெனில் எப்படிப்பட்ட அழுத்தம் இருந்தாலும் சரியான விடயத்தையே செய்யக்கூடிய தைரியத்தை கொண்டிருத்தலாகும். இது நம்பிக்கைகள், நோக்கங்கள் மற்றும் கொள்கைகளில் உறுதியாக நிலைத்திருத்தலாகும். நேர்மையாக இருத்தல் என்பது எமது நிறுவனத்தில் மிகவும் முக்கியமான விடயமாகும்.
நம்பகத்தன்மை கொண்ட ஒரு நபரால் பிறருடைய வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வண்ணம் செயல்படவும் பிறரை சிறந்த பாதையில் செயல்பட வைக்கவும் முடியும். சில நேரங்களில் இயலாது என நினைத்தவற்றை கூட செயல்படுத்த முடியும். ஆகவே நேர்மை பொருந்திய ஒரு கலாச்சாரத்தை உருவாக்குவதனை வலியுறுத்தி, யாரும் பார்க்காத தருணத்திலும் கூட சரியானதையே செய்யக்கூடிய தனி நபர்களை கொண்ட இடமாக உருவாக்க எத்தனிக்கின்றோம்.
"கொமர்ஷியல் கிரெடிட் ஆன நாம் கற்றல் என்பது உங்கள் வாழ்க்கையில் நாங்கள் செய்யக்கூடிய சக்திவாய்ந்த முதலீடு என்று நம்புகிறோம்..., உண்மையில் நாங்கள் உங்கள் சொந்த செயல்திறனுக்கான கருவிகளே.."
கற்றல் மற்றும் விருத்தியடைதல் போன்றவற்றை எமக்குள்ளே நாமே உருவாக்கிக்கொள்ளக்கூடிய ஒரு சிறந்த ஆளுமையை வழங்கக்கூடிய முதலீடாக கருதுகின்றோம். புதிய பாதையை நோக்கி செயற்பட மற்றும் எமது எல்லைகளை விருத்தி செய்து விஸ்தரிக்க நாம் நமக்கே கடமை பட்டிருப்பதாக நாம் நம்புகின்றோம். தனிப்பட்ட மற்றும் தொழில் ரீதியிலான முழுமைப்பாட்டை உறுதி செய்வதன் மூலம் நம்மை சூழ்ந்து இருக்கும் நபர்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த பங்களிப்பினை வழங்க எத்தனிக்கின்றோம்.
"வெற்றி-வெற்றி சிந்தனை மூலம் எங்களுடன் தொடர்பு கொள்ளும் அனைவருடனும் நீண்டகால, நிலையான உறவுகளை உருவாக்க விரும்புகிறோம்"
ஆக்கபூர்வமான சிந்தனை மற்றும் பரஸ்பர ரீதியிலான நன்மைகளை கருத்திற்கொண்டு பணியாற்றுதல் போன்றன எமது நிறுவனம் சார்ந்த தொழிற்பாடுகளில் மிக முக்கியமானதொன்றாகும்.
எமது தொழில் ரீதியிலான உறவு முறைகளில் இரு சாராரும் வெற்றி பெறாவிடில் இரு சாராரும் தோல்வியடைந்ததாகவே நாம் நம்புகிறோம். மேலும் பரஸ்பர நன்மைகள் பெறப்பட வேண்டும் என்பதற்காக நாம் கடுமையாக உழைக்கிறோம். எமது வழிமுறைகளை பின்பற்றுவதோ, தங்களது வழிமுறைகளை பின்பற்றுவதோ இங்கு கருத்திற்கொள்ளப்படவில்லை. எது சிறந்த வழிமுறையோ அதை நோக்கியே செயல்பட வேண்டும் என்பதனையே வலியுறுத்துகின்றோம்.
"பிரபஞ்சத்தின் சாராம்சம் மக்களிடையே உள்ள வேறுபாடு, மன, உணர்ச்சி மற்றும் உளவியல் வேறுபாடுகளை மதிப்பிடுவதாகும் - அவர்களை மதிக்கவும், பலங்களை உருவாக்கவும், பலவீனங்களை ஈடுசெய்யவும்."
எமது நிறுவனத்தில் அறிவு சார்ந்த, ஆற்றல்கள் மற்றும் வேலை செய்யும் விதம் போன்றவற்றிலான தனித்துவமான வேறுபாடுகளை சமநிலையுடன் இணைந்து கொண்டதன் மூலமாக ஒரே குழுவாக ஒரு பொதுவான இலக்கை அடைவதற்கான முக்கியத்துவத்தை உணர்ந்து அதற்கான அடிக்கோட்டினை இட்டுள்ளோம்.
எமது கலாச்சாரத்தில் கூட்டாக்கம் குழு வேலை மூலமாக மரியாதை வழங்குதல், புத்தாக்கம் மற்றும் கண்டுபிடிப்புக்கள் போன்றன ஊக்குவிக்கப்படுவதன் மூலமாக, சிறப்புத்தன்மை என்பது புதுமையானதொன்றல்ல என்று கூறக்கூடிய ஒரு சூழலை உருவாக்குகிறது. இது வேலை செய்வதை மேலும் இலகுவாக்குகிறது.