
கொமர்ஷியல் கிரெடிட் என்ட் ஃபைனான்ஸ் பி.எல்.சி நிறுவனமானது, இலங்கையின் நிதிச் சேவைகள் துறையில் நன்கு நிலைநிறுத்தப்பட்ட வர்த்தக நாமமாவதுடன், கடந்த தசாப்தத்தில் மிகவும் உயரிய சேவையை வழங்கிய, அதிகம் விரும்பப்படும் நிதிச் சேவை வழங்குனராகவும் செயற்படுகின்றது.
தொழில்துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்புற செயற்பட்டு வரும் கொமர்ஷியல் கிரெடிட் என்ட் ஃபைனான்ஸ் பி.எல்.சி நிறுவனமானது, இலங்கையில் தனிநபர்கள் மற்றும் வணிகங்களை எளிதாக்கும் பல்வேறு நிதி தயாரிப்புகளை வடிவமைத்து வழங்கியுள்ளது.
நியாயமான வணிக நடைமுறைகள் மற்றும் அதன் வாடிக்கையாளர்களுடன் கையாள்வதில் சிறப்புடன், மனிதநேயத்துடன் செயற்பட்டு அவற்றை மேம்படுத்துவதில் சிறந்து விளங்கும் ஒரு நன்கு அறியப்பட்ட நாமமாகும். கொமர்ஷியல் கிரெடிட் என்ட் ஃபைனான்ஸ் பி.எல்.சி தற்போது நாடளாவிய ரீதியில் 130 கிளைகளைக் கொண்டு இயங்கி வருகிறது.
அதன் சேவைகளான, வாகனக் குத்தகை, தங்கக் கடன்கள், வணிகக் கடன்கள் மற்றும் நுண்கடன்கள் ஆகியவற்றின் மூலம் நாட்டிலுள்ள 5 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் நிதித் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் நோக்கில் உதவியுள்ளன. எப்போதும் வாடிக்கையாளர் சேவையை மனதில் கொண்டு அதன் வணிகச் செயல்பாடுகளை வடிவமைத்திருப்பது மட்டுமல்லாமல், உங்கள் நிதிச் சேவை வழங்குநராக நீங்கள் கொமர்ஷியல் கிரெடிட் என்ட் ஃபைனான்ஸ் பி.எல்.சி யை தெரிவு செய்யும் பட்சத்தில் தரம், வேகம் மற்றும் நம்பிக்கையுடன் இணையற்ற சேவையைப் பெற்றுக்கொள்வீர்கள் என்பது நாம் தரும் உத்தரவாதமாகும்.
அதிகூடிய வட்டி விகிதங்கள், நெகிழ்வான திருப்பிச் செலுத்தும் வசதிகள், பிரத்தியேகப்படுத்தப்பட்ட கடன் தயாரிப்புகள் மற்றும் அதன் சேவை வழங்குவதற்கான சிறப்பு அணுகுமுறை ஆகியவை இலங்கையர்களின் இதயங்களில் கொமர்ஷல் கிரெடிட் என்ற வர்த்தக நாமத்தை பொறித்துள்ளது. ஒவ்வொரு நாளும் பலப்படுத்தப்படும் நிறுவனத்திக் நம்பிக்கையின் காரணமாக, கொமர்ஷல் கிரெடிட் இலங்கையில் முதலீட்டாளர்களின் இதயங்களை வென்றுள்ளதுடன், அவர்கள் வைப்பு அடிப்படையிலான தயாரிப்புகளுக்கு அதிக முன்னுரிமை அளித்துள்ளனர்.
எப்போதும் வளர்ந்து வரும் நிறுவனமாக, கொமர்ஷியல் கிரெடிட் என்ட் ஃபைனான்ஸ் பி.எல்.சி நாளுக்கு நாள் வலுவடைந்து அதன் நோக்கை உண்மையாக்கும்.
சிறு சிறு அன்பான விடயங்கள் மூலம் இன்னொருவருடைய வாழ்க்கை தரத்தை உயர்த்தக்கூடிய தலைவர்களை உருவாக்குதல்.
மிகவும் சுயாதீனமான ஊழியர்களினது, பங்குகளினது, செயல்திறனது, தன்மையினால் பாராட்டப்படக்கூடிய நிறுவனமாக போற்றப்படல்.
மிகவும் சக்தி வாய்ந்த நிறுவனமாக, நிறுவனத்தின் எல்லா மட்டத்திலும் தலைவர்களை உருவாக்கி சமூகத்திற்கு ஆர்வத்துடன் சேவை செய்யும் வகையில் முன்னேற்றுதல்.